திருப்பூரில் அதிமுக கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா

திருப்பூரில் தனியார் வளாகத்தில் அஇஅதிமுக கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலக திறப்புவிழா நடைபெற்றது.

Update: 2024-03-25 11:27 GMT

திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் வளாகத்தில் அஇஅதிமுக கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா! திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் வளாகத்தில் அஇஅதிமுக கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திருப்பூர் அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் இக்கூட்டத்தில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கேஎன் விஜயகுமார், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News