கிராமப்புறத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் துவக்கம் !

கிராமப்புறத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி துவக்கம் தமிழகம் முழுவதும் இன்று முதல் இரண்டாம் கட்டமாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தர்மபுரியில் தொடங்கி வைத்தார்.

Update: 2024-07-11 10:19 GMT

 முதல்வர் முகாம் துவக்கம் 

கிராமப்புறத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி துவக்கம் தமிழகம் முழுவதும் இன்று முதல் இரண்டாம் கட்டமாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தர்மபுரியில் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்புளியம்பட்டியில் இன்று செல்ல குமாரசாமி மண்டபத்தில் சிறுமொளசி,சித்தளந்தூர், புதுப்புளியம்பட்டி பிரிதி,இறையமங்கலம்,மொளசி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட மக்கள் வருவாய்த்துறை,விவசாயத்துறை தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட 15 துறைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று அதனை 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்க உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினார் அந்த மனுக்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, வட்டாட்சியர் விஜயகாந்த், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல்,ஆட்மா தலைவர் வட்டூர்தங்கவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்த மனுக்களை பெற்று அதனை பதிவு செய்து கொண்டனர் இந்த முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News