லஷ்மி கலை கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா !
கள்ளக்குறிச்சி லஷ்மி கலை-அறிவியல் கல்லுாரியில் இவ்வாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-13 05:32 GMT
லஷ்மி கலை கல்லுாரி
கள்ளக்குறிச்சி லஷ்மி கலை-அறிவியல் கல்லுாரியில் இவ்வாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கlளக்குறிச்சி பங்காரம் லஷ்மி கலை-அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு லஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் சிராஜ்தீன் வரவேற்றார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். இவ்வாண்டு வகுப்புகள் துவக்க விழா மற்றும் மலாலா பிறந்தநாள் பெண்களின் வளர்ச்சி நாளாககொண்டாடப்பட்டது. கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் பெரியசாமி, அனுசுயா ஒருங்கிணைத்தனர்.