பல் மருத்துவமனை திறப்பு விழா
குமாரபாளையத்தில் தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.;
Update: 2023-12-16 08:46 GMT
குமாரபாளையத்தில் தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தனியார் காகித ஆலை ரோடு காவேரி ஆர்.எஸ் என்ற பகுதி அருகே ,பல் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி கலந்து கொண்டு, மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் பொழுது பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி.எஸ்.வெள்ளியங்கிரி ,அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ்.செந்தில், ஆலாம்பாளையம் பேரூர் செயலாளர் செல்லதுரை, மற்றும் கட்சி நிர்வாகிகள் கே.பி.வேல்முருகன், எல்.கே.ராஜா, எஸ்.பாலச்சந்திரன் மற்றும் மருத்துவர் பி.தீபிகா BDS ஆகியோர் உடன் இருந்தனர்...