அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் திறன்மிகு வகுப்பறை திறப்பு

அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் திறன்மிகு வகுப்பறை திறப்பு விழா நடந்தது.

Update: 2024-06-20 04:52 GMT

அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் திறன்மிகு வகுப்பறை திறப்பு விழா நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சட்டப்பேரவைத் தொகுதி நிதி மற்றும் முன்னாள் மாணவர் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட திறன்மிகு வகுப்பறை, தாழ்தளக் கூரை ஆகியவற்றை எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ச. குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் 12 வகுப்பறைகளுக்கு குளிரூட்டி, இன்வெர்ட்டர், அலுமினியக் கதவு, ஜன்னல்கள், தாழ்தளக் கூரை, ஸ்மார்ட் போர்டு, பேட்டரி ஆகி நவீனமாக்கப்பட்ட வகுப்பறைகளை உருவாக்கிக்கொடுத்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பச்சலூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வீ. ஜோதிமணி, ஊர்வணி ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன், பிரண்ட்ஸ் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ரெ. தங்கதுரை ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக, மின்னணு மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் பி. ஜெயக்குமார் வரவேற்றார்.
Tags:    

Similar News