தேர்தல் அலுவலகம் திறப்பு விழா !
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-25 09:27 GMT
அலுவலகம் திறப்பு விழா
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திண்டுக்கல்லில் கடந்த முறை வெற்றி பெற்ற திமுக எம்.பி. மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆன்மிக நகரமான பழநியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன். என்னை வெற்றிபெறச் செய்தால், நாட்டிலேயே முன் மாதிரி தொகுதியாக திண்டுக்கல் தொகுதியை மாற்றுவேன் என்று கூறினார்.