அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

Update: 2024-03-08 11:19 GMT
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் முகையூர், மடையம்பாக்கம், அம்மனூர் ஆகிய கிராமங்களில் உள்ள 80℅ மக்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். கடந்த பருவமழையின் போது அப்பகுதியில் கன மழை பெய்து ஏரி, பாசனக்கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் 1500 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்தனர். அதன் அறுவடை சீசன் தற்பொழுது அந்த பகுதிகளில் கலை கட்டியுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி முகையூர், மடையம்பாக்கம், அம்மனூர் ஆகிய கிராமத்தில் ஒன்றிய கழக செயலாளர் பாபு ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
Tags:    

Similar News