தென்காசியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறப்பு

தென்காசியில் திமுக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-03-16 01:31 GMT

கண்காட்சி திறப்பு விழா

தென்காசி மாவட்டம் தென்காசி இசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நேற்று மாலையில் நடைபெற்றது. விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் தமிழ்நாடு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி பிஆர்ஒ இளவரசி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News