அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா
வடக்குத்தில் ரூ.25 லட்சம் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா நடந்தது.;
Update: 2024-03-14 06:30 GMT
வடக்குத்தில் ரூ.25 லட்சம் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா நடந்தது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு வடக்குத்து பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள், மருத்துவ அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள், கழக நிர்வாகிகள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.