சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரியில் மாடுலர் கிச்சன் திறப்பு !
சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரியில் புதியதாக மாடுலர் கிச்சன் திறப்பு விழா நடந்தது.
By : King 24x7 Angel
Update: 2024-07-16 05:28 GMT
சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரியில் புதியதாக மாடுலர் கிச்சன் திறப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக இயக்குனர் காமாட்சி சரவணன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரி நிர்வாக இயக்குனர் (வளாக வளர்ச்சி) கோகுல் கிருஷ்ணன் சரவணன், மருத்துவக்கல்லூரி டீன் எழில்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பிரபல சமையல் கலை நிபுணர் தாமோதரன் கோதண்டராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாடுலர் கிச்சனை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமையல் போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் சிறப்பாக சமையல் செய்த மாணவ, மாணவிகளுக்கு தாமோதரன் கோதண்டராமன் பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.