திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்ப விழா!
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக கட்சியின் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
Update: 2024-05-03 09:59 GMT
மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் பேரில் கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும் என்கின்ற அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் எம் எஸ் நகர் மண்டல தலைவர் வேலுச்சாமி ஏற்பாட்டில்திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர்மோர் , தர்பூசணி , வெள்ளரி வகைகள் வழங்கப்பட்டன ,, நிகழ்ச்சியில்மாநிலச் செயலாளர் மலர்கொடி,மாநில செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி,மாவட்ட துணை தலைவர்T.M.தங்கராஜ், மாவட்டபொதுசெயலாளர்கள்சீனிவாசன், பாலசுப்பிரமணியம்,மாவட்டச்செயலாளர்சுமதி,மாநில மாவட்ட மண்டல அணி பிரிவு நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்து கொண்டனர் ..