புதிய வழித்தட பேருந்து துவக்க விழா

ஒரகடம், திருநிலை, அருங்குன்றம் வழியாக திருப்போரூர் செல்லும் புதிய வழித்தட பேருந்தை எம்எல்ஏ எஸ்.எஸ் பாலாஜி துவக்கி வைத்தார்.

Update: 2024-07-03 04:15 GMT

புதிய வழித்தட பேருந்தை துவக்கி வைத்த எம்.எல்.ஏ 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குரல் கேட்போம் குறை களைவோம் என்ற தலைப்பில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்தார்.. அப்போது பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்..

அதன் ஒரு பகுதியாக திருப்போரூர் ஒன்றிய அருங்குன்றம், திருநிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர் பள்ளி கல்லூரி செல்வதற்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் சட்டசபையில் இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசியதின் பேரில் பள்ளி மாணவ மாணவியரின் வசதிக்காக மாலை நேரத்தில் மட்டும் செங்கல்பட்டு பணிமனையிலிருந்து டி 31 புதிய வழித்தட பேருந்து ஒரகடம் திருநிலை அருங்குன்றம் வழியாக திருப்போரூர் சென்றடைய போக்குவரத்து துறை முடிவு செய்தது அதனைத் தொடர்ந்து புதிய வழித்தட பேருந்து துவக்க விழா நேற்று மாலை அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டு கொடி அசைத்து பேருந்தை துவக்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பள்ளி மாணவ மாணவியரிடையே பேசிய எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி நன்றாக கல்வி பயில வேண்டும் எனவும் உங்கள் வசதிக்காகவே பேருந்தை ஏற்பாடு செய்திருக்கிறோம் கல்வி மட்டுமே உங்களுக்கு என்றும் துணை இருக்கும் ஆகையால் நன்றாக படியுங்கள் என மாணவ, மாணவியரிடம் கேட்டுக் கொண்டார் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை மண்டல மேலாளர் தியாகராஜன் கிளை மேலாளர் சீனிவாசன், மக்கள் பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் விசிக நிர்வாகி மானாம்பதி நந்தா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.



Tags:    

Similar News