புதிய ஸ்டேட் பாங்க் கிளை -சரவணன் எம்.எல்.ஏ திறப்பு

காஞ்சி ஊராட்சியில் புதிய ஸ்டேட் பேங்க் கிளையை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ சரவணன் திறந்து வைத்தார்.

Update: 2023-10-30 03:20 GMT

கடனுதவி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன் றியத்துக்குட்பட்ட காஞ்சி ஊராட்சியில் புதிய ஸ்டேட் பேங்க் கிளைதிறப்பு விழாநடைபெற்றது. இந்த விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம்பொதுக் குழு உறுப்பினர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகிக்க ஊராட்சிமன்றதலைவர்ஜெயந்தி லட்சுமணன்(எ)சீனு, அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெ.சு. தி.சரவணன், எம்எல்ஏ புதிய ஸ்டேட் பேங்க் கிளையைத் திறந்து வைத்து மகளிர் சுய உதவிக்குழு மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கடனுதவியினை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், கலசபாக்கம் தொகுதியில் புதிய ஸ்டேட் பாங்க் வங்கி இல்லாததால் தொகுதி மக்கள் அடுத்த தொகுதிக்கு சென்று ஸ்டேட் பேங்க் கணக்கு வைத்து அதன் மூலம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர் மேலும் ஸ்டேட் பாங்க் மூலம் வழங்கப்படும் கடன் உதவி அனைத்தும் மகளிர்க்கும் விவசாயிகளுக்கும் சரியான முறையில் கிடைக் காமல் இருக்கிறது நமது தொகுதியில் புதிய ஸ்டேட் பேங்க் வங்கி இருந்தால் நமது தொகுதி மக்களுக்கும் மகளிர் குழு கடன் உதவி முழுமையாக கிடைக்கும் என்பதற்காக அப்பகுதி மக்கள் அனைவரும் என்னிடம் புதிய ஸ்டேட் வங்கி வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அதன் மூலம் வங்கி மேலாளர் இடம் நேரில் தொடர்பு கொண்டு அவரிடம் கலசபாக்கம் தொகுதியில் புதிய ஸ்டேட் பாங்க் வங்கி துவங்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டேன் அதன் அடிப்படையில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் யூனியனில் உள்ள காஞ்சி ஊராட்சியில் புதிய ஸ்டேட் பேங்க் வங்கி கிளையை தொடங்கி வைத்துள்ளனர் அதன் மூலம் எளிய முறையில் மகளிர் குழுக்களுக்கும் பசு மாடு லோன், ஆடு லோன், கல்வி கடன், நகை கடன், போன்ற அனைத்து கடன்களையும் வழங்கி கிராமங்களை வளர்ச்சியான கிராமமாக மாற்றுவதற்கு உண்டான பணியை செய்து வருகிறோம் அதேபோல் தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் பெற்று கொடுத்து வருகிறேன் இது போல் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறோம் இதனால் கிராமங்கள் அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடையவேண்டும் என்பதற்காக இந்த தமிழக அரசின் திட்டங்களை உடனுக்குடன் பெற்று கொடுக்கிறேன் என்றார்.


Tags:    

Similar News