விருதுநகரில் மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குநர் அலுவலக திறப்பு

விருதுநகரில் மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குநர் அலுவலக புதிய கட்டடத்தை அமைச்சர்கள் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு திறந்து வைத்தனர்.

Update: 2024-03-16 12:03 GMT
புதிய கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள் 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலையில், ரூ.75 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குநர் அலுவலகத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

மருந்து கட்டுப்பாடு துறை, தமிழ்நாட்டில் தனித்துறையாக மருந்து கட்டுபபாடு இயக்குநரை துறைத் தலைவராகப் பெற்று செயல்பட்டு வருகிறது. நிர்வாகம் திறம்பட செயல்பட இத்துறையின் கீழ் 25 மண்டல அலுவலகங்கள் (சென்னையில் 5 மற்ற பகுதிகளில் 20) மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் தங்கள் பகுதியில் மருந்துகள் தங்கு தடையின்றி கிடைப்பதினை நோக்கமாகக்கொண்டு மருந்து விற்பனை உரிமங்களை வழங்கவும்/புதுப்பிக்கவும் அதிகாரம் பெற்று இத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றனர்.

விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய தூத்துக்குடி மண்டல மருந்து கட்டுப்பாடுத்துறை விருதுநகரில் மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநரின் கீழ் தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து, இன்று ரூ.75 இலட்சம் மதிப்பில் மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குநர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்துறையில் 1 மூத்த மருந்தாய்வாளர் (ம) 5 மருந்து ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். மருந்துகள் தரமானதாகவும், தட்டுப்பாடின்றியும் சரியான விலையில் கிடைத்திடுவதை உறுதி செய்வது இத்துறையின் பிரதான நோக்கமாக கொண்டும், மருந்து (ம) அழகுசாதனச் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945 இன் படி செயல்படுகிறது.

இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது துறை ரீதியாகவோ, நீதிமன்றம் வாயிலாகவோ உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த புதிய அலுவலகக் கட்டடம் உதவி இயக்குனர் அறை, பதிவு அறை, அலுவலக அறை, பொருள் வைப்பு அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் சுமார் 2410 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News