புதுகையில் ஊரமைப்பு அலுவலக கட்டடம் திறப்பு!
புதுக்கோட்டையில் ரூ.2.02 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கா (டிடிசிபி) அலுவலகக் கட்டடத்தை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-12 04:43 GMT
புதுக்கோட்டையில் ரூ.2.02 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கா (டிடிசிபி) அலுவலகக் கட்டடத்தை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்துவைத்தார். இந்தக் கட்டடத்தின் முதல் மற்றும் தரைத் தளத்தில் நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் அறை, பார்வையாளர் அறை, ஆவணங்கள் வைப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சிரம்யா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, நகர்மன்றத்தலைவர் செ திலகவதி, மூத்த வழக்குரைஞர் கே.கே. செல்லப்பாண்டியன், நகர் ஊரமைப்புத் துறை இணை இயக்குநர் (பொ) அ. பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.