திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அதியமான்கோட்டையில் பேருந்து நிலையத்தில் பகுதியில் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஏ எஸ் சண்முகம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக, தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் தலைமை தாங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரி மற்றும் நீர்மோரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வர்த்தக அணி துணை அமைப்பாளர் துரை, ஒன்றிய துணை செயலாளர் ரங்கநாதன், மாவட்ட பிரதிநிதி மகேஷ், ஒன்றிய அவை தலைவர் வீரமணி, கிளை செயலாளர்கள் கமலேசன், அண்ணாதுரை, சைக்கிள்ஷாப் மணி, மார்ட்டின் மூர்த்தி, ராமன், சண்முகம், அன்பரசு, தமிழ்நிதி, சரவணன், பணி நிறைவு தலைமை ஆசிரியர் ராசப்பன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.