எல்லப்புடையாம்பட்டியில் இடைவிடாத கனமழை
அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-04 10:42 GMT
தர்மபுரி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வரும் சூழலில் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லப்புடையாம்பட்டி, வெங்கடசமுத்திரம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஜூன் 4 காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் 1 மணி முதல் சத்தம் இல்லாமல் இடைவிடாத கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் கோடை உழவு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கனமழை கொட்டித்திருப்பதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது