குமரியில் தொடர்  மழை : திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

Update: 2023-11-07 14:01 GMT

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக பரவலாக தினமும் மழை பெய்து வருகிறது. தற்போது மீண்டும் மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றாறு-2 அணைப்பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

புத்தனார் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மணவாளக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம்  மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அங்கு நெல் அறுவடை செய்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த டிரைவர் சபரி ராஜா மின்னல் தாக்கி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் தலா 2 வீடுகள் மழைக்கு இடிந்து விழுந்தது.

Tags:    

Similar News