வேப்பனப்பள்ளியில் தொடர் மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேகமூட்டத்தின் காணப்பட்ட வந்த நிலையில் முந்தினம் மாலை 7 மணி முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை இடி மின்னலுடம் 3 மணி நேரத்திற்க்கும் மேலாக கனமழை பெய்தது.
இதில் வேப்பனப்பள்ளி நாச்சிகுப்பம், தீர்த்தம், நேரலகிரி, சிங்கிரிப்பள்ளி, கொங்கணப்பள்ளி, மாதேப்பள்ளி நெடுச்சாலை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சிதோசன நிலை வருகிறது. மேலும் இப்பகுதியில் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகள் அனைத்தும் தற்போது நீர் நிரம்பி வருகிறது தொடர்ந்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.