கிழங்கு புரோக்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
தெற்குக் காடு பகுதியில் கிழங்கு புரோக்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-06 15:27 GMT
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு தெற்குகாடு பகுதியில் வசிக்கும் ஜெகநாதன் மகன் விஜயகுமார், என்பவரது வீட்டில் ரொக்கம் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது. இதன் அடிப்படையில் சேலம் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் இரண்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்,
தெற்காடு பகுதியில் உள்ள விஜயகுமார் வீட்டில் சோதனையிட்டனர். விஜயகுமார் கிழங்கு வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும் கைப்பற்ற படாததால், ஒரு மணி நேர சோதனைக்கு பின் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.