பைனான்சியர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை!
வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைக்கபட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை.;
Update: 2024-04-15 16:10 GMT
வருமானவரித்துறை சோதனை
கோவை துடியலூர் அருகே நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீடு நல்லாம்பாளையம் சபரி கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் இவரது வீட்டிற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பிற்பகல் 3 மணிக்கு துவங்கிய சோதனை இரவு 8 மணிக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இவர் அதிமுக அனுதாபி என கூறப்படும் நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை சிவானந்தா காலனி பகுதியில் திமுக பிரமுகர் மீனா லோகு இல்லத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் பிற்பகலுக்கு பின்னர் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.