கிறிஸ்தவ தேவாலய புனரமைப்பு மானியத் தொகை உயர்வு

கிறிஸ்தவ தேவலாயங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-05 05:47 GMT

ஆட்சியர் பிரசாந்த் 

ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சொந்த கட்டங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவலாயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிபெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சொரூபங்கள், மெழுவர்த்தி ஸ்டாண்டுகள், பெஞ்சுகள் போன்ற ஆலையங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சுற்றுசுவர் வசதி அமைத்தல் உள்ளிட்ட கூடுதல் பணி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி தேவாலய கட்டடத்திற்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை 10 லட்சம் ரூபாயாகவும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு 15 லட்சம் ரூபாயாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் 20 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. கலெக்டர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறிஸ்தவ தேவலாயங்கள் ஸ்தல ஆய்வு செய்யப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News