ஒகேனக்கல்லில் 3,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-05-24 04:14 GMT
தர்மபுரி மாவட்டம் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள அமைந்துள்ள பிரபல சுற்றுலா தளமான ஒகேனக்கல் காவிரியாற்றில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் காவிரி ஆற்றில் தற்போது கோடை காலம் என்பதால் நீர் வரத்து சரிந்து பாறைகளாக காணப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளிலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது கடந்த மூன்று நாட்களாக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் வினாடிக்கு சுமார் 3,000 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டலவில் மத்திய நீர்வள மேலாண்மை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News