வெப்ப அலை அபாயம் - ஆட்சியர் அறிவுரை

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-04-24 03:59 GMT

 ஆட்சியர் பிருந்தாதேவி

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக அத்தியாவசிய தேவையின்றி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News