கோடை வெப்பம் அதிகரிப்பு; கலெக்டர் கலைச்செல்வி அட்வைஸ்!

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-03-23 06:21 GMT

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கீழ்க்கண்ட தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளார். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க, செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.

பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். வெளிர் நிறமுள்ள, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி மற்றும் குடை கொண்டு செல்ல வேண்டும். என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News