குணா குகை சுற்றுலா தலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குணா குகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
Update: 2024-03-02 02:27 GMT
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக குணா குகை உள்ளது,இந்த சுற்றுலா தலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது, இந்த சுற்றுலா தலத்தின் பல வருடங்களுக்கு முன்பு பேய்களின் சமையலறை என்று அழைக்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இந்த சுற்றுலா தலத்தில் குணா படம் பிடிக்கப்பட்டு திரைப்படம் வெளியான நிலையில் குணா குகை என அழைக்கப்பட்டது,
இதனையடுத்து இந்த சுற்றுலா தலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மஞ்சு மேல் பாய்ஸ் படம் பிடிக்கப்பட்டு திரைப்படம் வெளியான நிலையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.