எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தேவதானப்பட்டி அருகே தொடர் மழை காரணமாக எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-05-25 15:12 GMT

தேவதானப்பட்டி அருகே தொடர் மழை காரணமாக எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே வனபகுதியில் அமைந்துள்ளது எலிவால் அருவி இந்த அருவியின் அழகினை கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் டம் டம் பாறை என்ற இடத்தில் இருந்து ரசித்து செல்வது வழக்கம் போதிய மழையின்மை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எலிவால் அருவி வறண்ட நிலையில் காணப்பட்டது இந்த நிலையில் சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தற்போது எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது
Tags:    

Similar News