மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.

Update: 2024-05-11 05:25 GMT

குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.


குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்திருந்த நிலையில் வெப்பத் தின் தாக்கம் குறைந்திருந்தது. குமரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருகிறது.இருப்பினும் பிற்பகல் வேளையில் வானம் மேக மூட்டத்துடன் காணப் படுவதும் மழை பொழிவதுமாக இருந்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

நேற்றும் மதியம் முதல் வானம் மேகமூட்டத்து டன் காணப்பட்ட நிலை யில் வில்லுக்குறி உட்பட ஒரு சில இடங்களில் மழை பெய்திருந்தது.மாவட்டத்தில் அதிகபட்ச மாக பெருஞ்சாணியில் 56.6 மி.மீ மழை பெய்துள்ளது மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 44.34 அடியாக உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 47.3 அடியாக உள்ளது. மலையோர பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Tags:    

Similar News