அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-30 07:15 GMT

பைல் படம் 

பழநி மற்றும் ஓட்டன்சத்திரம் வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களில் மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வனப்பகுதி எல்லைகளில் யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இவை உணவு தேடி வனப்பகுதி எல்லைகளை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து விடும் அபாயம் நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News