இழப்பீடு கேட்டு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

கரூர் மாவட்டம்,ஆண்டிபாளையம் பகுதியில் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தால் உயர்மின் கோபுர பாதை அமைக்கப்பட்டதிற்கு உரிய இழப்பீடு வழங்ககோரி விவசாயிகள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Update: 2024-04-21 17:27 GMT

உண்ணாவிரத போராட்டம்

 கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரை தோட்டம் வரை 110 kv தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தால் உயர்மின் கோபுர பாதை அமைக்கப்பட்டது. நிறுவப்பட்ட பாதை செல்லும் வழியில் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு வழங்காமல் உள்ளது. நில மதிப்பு நிர்ணயம் செய்யாமலும், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு, பனைமரம், வேளாம் மரம், வேப்பமரம், முருங்கை மரம், கொழுக்கட்டை புல் , கிளுவை உயிர்வேலி மற்றும் காய்கறி செடிகளுக்கான இழப்பீடும் வழங்க படாமல் உள்ளது.

மேலும், சட்ட விரோதமாக காவல் துறையை வைத்து பயிர்கள் மற்றும் மரங்களை வெட்ட முயற்சி செய்து வருகிறார்கள். ஆகவே அரசு அதிகாரிகளின் போக்கை கண்டித்தும், இழப்பீடு வழங்க வேண்டியும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தோட்டத்தில் இழப்பீடு பெறாத, பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று துவங்கியது.

Tags:    

Similar News