நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் தொழில்துறையினர், மாணவர்கள் கலந்துரையாடல்

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் தொழில் நிறுவன பிரதிநிதிகள், மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

Update: 2024-07-05 08:02 GMT

இன்டஸ்ட்ரி கனெக்ட் 2024

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பி.இ., பி.டெக் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ‘இன்டஸ்ட்ரி கனெக்ட் 2024’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியானது தற்போதைய தொழில்நுட்ப சூழ்நிலைக்கு ஏற்ப வளாகத்தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ளவும், தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் அறிவை பெறவும் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த நபர்களை கொண்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளை நிறுவனர் பி.எஸ்.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இதில் 700-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக எச்.சி.எல். நிறுவன கஞ்சன் கெட்கர், சென்னை டெக் மகேந்திரா நிறுவன இளையராஜா, பெங்களூரு பிளம்ப்5 நிறுவன விஜய்சந்தர், சென்னை டேலண்ட் டெவலப்மெண்ட் - கேடர்பில்லர் எஸ்.வேலு, கோவை ெடஸ்சால்வ் செமிகண்டக்டர் நிறுவன கிரிதரன் பழனியப்பன், ஸ்ரீபெரும்புதூர் கார்லிஸ்ல் பிரேக் அன்ட் பிரிக்சன் நிறுவன தீபக்ராஜன், கோவை தால்கிர் ரியாலிட்டீஸ் நிறுவன சுதாகர் ஆகியோர் மாணவர்களிடையே கலந்துரையாடினர். மேலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவதற்கு தேவையான வழிமுறைகளை தெளிவுபடுத்தினர். கல்லூரி துணை முதல்வர் விசாகவேல், வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஐ.டி. துறையின் தலைவர் சச்சிதானந்தம் வரவேற்றார். சி.எஸ்.இ. துறை தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News