விலையில்லா விருந்தகம் - ஏ.சி சண்முகம் துவக்கி வைப்பு
வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் துவங்கப்பட்ட விலையில்லா விருந்தகம் நிகழ்ச்சியை புதிய நீதி கட்சியின் நிறுவனர் டாக்டர் ஏசி சண்முகம் துவக்கி வைத்தார்.;
விளையிட்ட விருந்தகம்
வேலூர் மாவட்டம் வேலூர் சலவன் பேட்டை பகுதியில் உள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கம் வேலூர் மாவட்ட மாணவர் அணி அலுவலகத்தில் மாவட்ட மாநகர மாணவரணி தலைவர் வி பாரத் தலைமையில் தினமும் காலை விலையில்லா விருந்தகம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 250 வது நாளை முன்னிட்டு விலையில்லா விருந்தகம் நிகழ்ச்சியை புதிய நீதி கட்சியின் நிறுவனர். டாக்டர். ஏ சி சண்முகம் துவக்கி வைத்து ஏழை எளிய பொதுமக்களுக்கும் காலை சிற்றுண்டியாக, இனிப்பு பொங்கல், இட்லி, சேமியா,வடை, என உள்ளிட்ட பல்வேறு சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. மேலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இனிவரும் காலங்களில் தினமும் காலை சிற்றுண்டி மட்டுமில்லாமல், ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவும் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.