உலக குருதி கொடையாளர்கள் தினத்தில் ரத்ததானம் அளித்த தகவல்கள்

அரசு மருத்துவமனையில் 20 ஆவது உலக குருதி கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் அளித்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.

Update: 2024-06-15 06:28 GMT
உலக சுகாதார நிறுவனம் இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த கொடையாளர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏ,பி,ஓ,ஏபி இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும். இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று மை தருமபுரி அமைப்பின் சார்பாக குருதி கொடையாளர்கள் அரசு மருத்துவமனை மற்றும் மாருதி இரத்த வங்கியில் இரத்ததானம் கொடை வழங்கினர். அரசு மருத்துவமனை குருதி வங்கி மருத்துவர் மருத்துவர் கன்யா அவர்கள் இரத்ததான கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் 89 முறை இரத்ததானம், தட்டணுக்கள் தானம் அளித்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Tags:    

Similar News