திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை துவக்கம்
திருப்பூர் மாநகராட்சியில் 43,52- வது வார்டு பகுதியில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட ஏபிடி ரோடு மின் மயானம் அருகில் மூலதன மானிய நிதி (2023-24) ரூ. 4 கோடியே 61 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண். 42-க்குட்பட்ட கே. வி. ஆர்.நகர் சந்திப்பு (சென்னை பேக்ஸ்) முதல் ஜீவா நகர் வழியாக ஜம்மனை ஓடை வரை புதிய ஆர்.சி.சி மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் அமைத்தல் மற்றும் ரூ.7கோடியே95இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்-43, 52 க்க உட்பட்ட ஜம்மனை ஓடையில் தெற்குத் தோட்டம் 6 வது வீதி சந்திப்பு முதல் ஏ. பி. டி. சாலை மின் மயானம் வரை இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்தல் பணி துவக்க விழாவிற்கான பூமி பூஜையை துணை மேயர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி,மாநகர பொறியாளர் செல்வநாயகம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.