தூவாகுடி அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2024-02-20 11:06 GMT

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இயங்கும் இந்திய மாணவா் சங்கத்தின் கிளை மாநாடு திருவெறும்பூா் சிஐடியூ அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கிளையின் தலைவா் அபிநயா தலைமை வகித்தாா்.

மாநாட்டில், துவாக்குடி அரசுக் கலை கல்லூரிக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும். கல்லூரியில் குடிநீா் வசதியை மேம்படுத்தி தர வேண்டும். கல்லூரிக்குள் செயல்பட்டுக் கொண்டிருந்த மாணவிகள் விடுதியை சீரமைக்க வேண்டும். கல்லூரிக்கு எதிரே இயங்கும் அரசு மதுக்கடையை இடமாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கிளையின் துணைத் தலைவா் அபி வரவேற்றாா்.

இதில் செயலாளா் கௌதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் ராஜேஷ் நன்றி கூறினாா்.

Tags:    

Similar News