பாலத்தில் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல் !

செவிலிமேடு பாலாறு பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-26 08:38 GMT

 பாலத்தில் விளக்கு

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடிற்கும், புஞ்சையரசந்தாங்கலுக்கும் இடையே பாலாறு குறுக்கிடும் இடத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, உயர்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக, பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, திருவண்ணாமலை, அய்யங்கார்குளம்,செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பாலத்தின் மீது, இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், மின்விளக்கு வசதி இல்லாததால், சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், பாலத்தில் உள்ள சாலை இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் நிலை தடுமாறும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, செவிலிமேடு பாலாறு பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News