தச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திட்ட குழு உறுப்பினர் ஆய்வு செய்தார்.
Update: 2024-02-13 04:43 GMT
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திட்ட குழு உறுப்பினர் ஆய்வு செய்தார். தமிழக அரசின் மருத்துவ திட்டக்குழு உறுப்பினர் சிவராமன் தச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் ஆய்வு மேற்கொண்டு சித்த மருத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.