தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு துறை ஆணையர் ஆய்வு

ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2024-07-05 10:19 GMT

ஆணையர் ஆய்வு

ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் 2024ம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை குறித்து விவாதித்ததுடன் அவர்களுக்கு வழங்கப்படும் அரசின் விலையில்லா சீருடை,இலவச பஸ் பயணச்சீட்டு மற்றும் பயிற்சி உபகரணங்கள் ஆகியவற்றை பயிற்சி தொடங்கும் நாளிலேயே வழங்குவது குறித்து அவர் அறிவுரை வழங்கினார். மேலும் பயிற்சியாளர்கள் பணியமர்வு செய்யப்படுவதற்கான மாவட்டத்திலுள்ள வாய்ப்புகள் குறித்து கலெக்டர் வளர்மதியுடன் அவர் கலந்துரையாடினார். தொடர்ந்து பயிற்சியாளருக்கு சேர்க்கை ஆணையினையும், டாடா 2.0 தொழில் பயிற்சியில் சேர்வதற்கான ஆணையினையும் மாணவர்களுக்கு வழங்கினார். ஆய்வின்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப் பிரிவு) சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குனர் பிரபாகரன், ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக முதல்வர் ஆறுமுகம், உதவி இயக்குனர் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News