திருவேற்காடு நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையால் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள திருவேற்காடு கூட்டுறவு நகர், நூம்பல் தாய்மூகாம்பிகை நகர், அயனம்பாக்கம் ஐஸ்வர்யா நகர், கோலடி மற்றும் அயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்,
அப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்காத வகையிலும் தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்றுவதற்கான வடிகால் அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
உடன் திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, பூவிருந்தவல்லி வட்டாட்சியர் மாலினி, திருவேற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், முனுசாமி, பொதுப்பணி மேற்பார்வையாளர் ரங்கசாமி, உதவி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.