ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.;
Update: 2024-03-28 10:50 GMT
தேர்தல் அலுவலர் ஆய்வு
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தில் (MCMC) தொலைக்காட்சிகளில் வரும் தேர்தல் குறித்த செய்திகள் மற்றும் விளம்பரங்களை பதிவு செய்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தேர்தல் பொது பார்வையாளர்கள் கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, சுரேஷ், முத்தாடா ரவிச்சந்திரா, ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், முன்னிலையில் 27.03.2024 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.