மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் நடைபெறும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.;
Update: 2024-02-19 05:12 GMT
ஆய்வு மேற்கொண்ட போது
பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு எடப்பாளையம் தெருவில் நடைபெறும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் க. இராஜேந்திரன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். உடன் நகரக் திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவர் ராஜா, நகர மன்ற உறுப்பினர்கள் கௌரி அன்பழகன், கிருஷ்ணராஜ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.