ஏப்.19 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அறிவுறுத்தல் !

மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, அனைத்து நிலை பணியாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குப் பதிவு நாளான ஏப்.19 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-18 05:18 GMT

ஆட்சியர் பூங்கொடி

மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, அனைத்து நிலை பணியாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குப் பதிவு நாளான ஏப்.19 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்று வாக்களிப்பதற்கு ஏதுவாக, நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காதபட்சத்தில், அது தொடர்பான புகார்களை 0451-2461429 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News