தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர்பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் கூறியுள்ளார்.

Update: 2024-05-04 04:13 GMT

தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர்பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் கூறியுள்ளார்.


பெரம்பலூர் மாவட்டம் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர்பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல்... பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ள தகவலில் தண்ணீர் பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம், புது தில்லி, கடந்த 30.04.2024. ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட முன்மொழிவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. எந்த ஓர் அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்தச் செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது எனவும், தண்ணீர்பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே, தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும். ஆணையத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு சுகாதாரம். தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றவும் அனுமதிக்கபடுகிறது. தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர்பந்தல் செயல்பாடுகள் நடைபெற வேண்டும். என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News