அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்த்து பயன் பெற அழைப்பு
தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேர்த்து பயன் பெற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேர்த்து பயன் பெற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக தூத்துக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் மு. பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
"அஞ்சலகம் உங்களுக்கு சேமிப்புத் திட்டம் மட்டுமல்லாது ஆயுள் காப்பீடு வசதியையும் வழங்குகிறது அதாவது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம். இந்திய குடியரசுத் தலைவர் பெயரால் மத்திய அரசாங்கமே பாலிசி வழங்குவதால் நம்பகத்தன்மை வாய்ந்தது. மேலும் குறைந்த பிரிமீய தொகையில், அதிக போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
அஞ்சலக காப்பீடு திட்டங்கள் பொது மக்களின் வாழ்விற்கு சேமிப்புடன் பாதுகாப்பையும் சேர்த்து வழங்குகிறது. 19 – 55 வயது வரையிலானவர்கள் அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச கவரேஜ் தொகை 20,000 ரூபாய் வரையிலும், அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு செய்ய முடியும். அனைத்து அரசு/ தனியார் ஊழியர்கள், அனைத்து பட்டப்படிப்பு/ பட்டயப் படிப்பு/ தொழிற்படிப்பு பெற்றவர்கள் பாலிசியில் சேர்வதற்கான தகுதியானவர்கள். அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 01.02.1884. அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் நாள் அஞ்சல் ஆயுள் காப்பீடு நாளாக நாம் கொண்டாடி வருகின்றோம்.
இதற்காக அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேர்த்து பயன் பெற சிறப்பு வசதிகள் 01.02.2024 அன்று செய்யப்பட்டுள்ளது அனைவரும் இந்த சிறப்பான திட்டத்தில் இணைந்து பயன் பெற அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகுமாறு தூத்துக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் மு. பொன்னையா அழைப்பு விடுத்துள்ளார்.