வேளாண்மை கல்லூரிக்கு நிலம் கையகப்படுத்தல் பணி தீவிரம்
கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரிக்கு அட்சயலிங்க சாமி கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வேளாண்மை கல்லூரி கிடப்பில் போட்டது.இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தது இதை எடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த ஆண்டு கீழ்வேளூரில் மேலாண்மை கல்லூரியை தொடங்கி வைத்தார்.
வேளாண் கல்லூரி கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள கட்டிடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது அதை தொடர்ந்து இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேலாண்மை கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்ட கீழ்வேளூர் பகுதியில் இடங்கள் பார்க்கப்பட்டு வந்த நிலையில் கீழ்வேளூரை அடுத்த வடக்குவெளி கிராமத்தில் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமிக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது .
இதை அடுத்துகீழ்வேளூர் அடுத்த அகர கடம்பனூர் ஊராட்சி வடக்கு வெளி கிராமத்தில் அட்சய லிங்க சுவாமி கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரியின் முதல்வர் ரவி , இந்து அறநிலையத்துறையை சேர்ந்த வட்டாட்சியர் (நிலங்கள்) அமுதா, கீழ்வேளூர் அட்சய லிங்க சுவாமி கோயில் செயல் அலுவலர் பூமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் செல்வி, மேலாண்மை கல்லூரியின் பேராசிரியர்கள் உள்ளிட்டார் இடத்தை பார்வையிட்டனர்.