மலை பாதைகளில் மரங்களை அகற்றும் பணி தீவிரம்
மலை பாதைகளில் மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-21 14:16 GMT
மரங்களை அகற்றும் பணி
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மலை பாதையில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படுகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோத்தகிரி இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் உள்ள குஞ்சப்பனை பகுதியில் நான்கு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவுகளை அப்புறப்படுத்தினர். மேலும் சாலை ஓரங்களில் ஆபத்தான மரங்கள் அகற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இன்று அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக குஞ்சப்பண்ணை பகுதியில் இருந்த அபாயகரமாக மரங்களை அப்புறப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.