பாஜகவில் உட்கட்சி பூசல்: 3பிரமுகர்கள் மீது வழக்கு
பாஜக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பாஜக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் முத்து மாணிக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்து மறுநாள் 20 ஆம் தேதி பாஜக பூத் ஏஜென்ட் பணம் ரூபாய் 1500 சிலருக்கு வராததால் துரைப்பாக்கம் மேட்டுகுப்பத்தில் உள்ள துரைப்பாக்கம் மண்டல தலைவர் ஜெகநாதன் என்பவர் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.
அந்த இடத்தில் பூத் ஏஜென்ட் பணம் ரூபாய் 1500 சிலருக்கு கிடைக்கவில்லை என சரமாரி வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் சலசலப்பு நிலவியதாக கூறப்படுகிறது. அப்பொழுது முத்து மாணிக்கம் என்பவரை அசிங்கமா பேசி, மிரட்டியதாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் துரைப்பாக்கம் பாஜக மண்டல துணை தலைவர் வாசு(46), 196 வது பாஜக வட்ட தலைவர் வெங்கட்(36), 195 பாஜக வட்ட செயலாளர் ஜெயகுமார்(50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பாஜக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.