கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் சர்வதேச சிறுகோள்கள் தினம்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அஸ்ட்ரோகிளப் மற்றும் வானியல் மன்றம் சார்பில் சர்வதேச சிறு கோள்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.

Update: 2024-07-02 04:34 GMT

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கல்

 சூரிய குடும்பம் உருவானபோது அதிலிருந்து சிதறடிக்கப்பட்ட வான்பொருள்தான் சிறுகோள்கள் ஆகும்,செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையில் லட்சக்கணக்கில் சிறுகோள்கள் உள்ளன.1908ம் ஆண்டு ஜூன் 30ல் ரஷ்யாவின் மத்திய சைபீரியாவில் உள்ள துங்கஸ்கா ஆற்றின் அருகே மணிக்கு 1 லட்சத்து 13ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் ஒரு கல்துண்டு விழுந்து பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.இந்த துங்கஸ்கா நிகழ்வை 2015ம்ஆண்டு முதல் சர்வதேச சிறுகோள்கள் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சிறுகோள்கள் தின வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா தலைமை வகித்தனர்.தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோகிளப் நிர்வாகிகள் முத்துசாமி, முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வானியல் மன்ற ஆசிரியை ஒருங்கிணைப்பாளர் அம்பிகா அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா கலந்து கொண்டு  சிறுகோள்கள் தின வினாடி வினா போட்டியில் வென்ற 11ம் வகுப்பு மாணவிகள் மகா ஸ்வேதா, மோனிகா, நந்தினி அமிர்தா, 9ம்வகுப்பு மாணவிகள் சர்மதா, ஹேமாஸ்ரீ, முத்துகாவியா,ஆகியோருக்கு பரிசுகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பேசினார். இதில் உதவி காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, ஆசிரியர்கள் கிரேனா, கண்ணன், சுப்பிரமணியன் உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை இன்பென்டா நன்றி கூறினார்.

Tags:    

Similar News