சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: விழிப்புணர்வு ரங்கோலி போட்டி

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ரங்கோலி போட்டிகள் நடந்தன.

Update: 2023-12-04 14:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3-ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் உறுதி ஏற்றுள்ள, "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்", "சமுதாயத்தில் ஒருவரும் விடுபடக்கூடாது" ("LEAVE NO ONE BEHIND") என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ரங்கோலி கோலப் போட்டி நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சுயமரியாதை, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை வரைந்தனர்.

Tags:    

Similar News