அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சர்வதேச சுகாதார கருத்தரங்கு

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனையில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பொதுசுகாதார பிரிவின் சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

Update: 2024-04-23 03:47 GMT

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனையில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பொதுசுகாதார பிரிவின் சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனையில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பொதுசுகாதார பிரிவின் சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தைவானின் தாஜன் பல்கலைக்கழக பேராசிரியர் அகோரமூர்த்தி, பெங்களூரு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் சி-பிரிவு விஞ்ஞானி திலகவதி, மும்பை ஐ.ஐ.டி. கிராமப்புற தரவு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு ஆய்வக இயக்குனா் பென்னன்சின்னசாமி, ெசன்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் பொது சுகாதார பிரிவின் உதவி பேராசிரியை கீதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் துறையை சேர்ந்த அனைத்து முதுகலை பிரிவு மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை மற்றும் படவிளக்க காட்சி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளையும் துறையின் பொது சுகாதார பிரிவின் பேராசிரியை தமிழ்சுடர், உதவி பேராசிரியர்கள் பிரியங்கா மற்றும் திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News